Skip to content

Swing Trading என்றால் என்ன? புதியவர்களுக்கான எளிய விளக்கம்

Swing Trading என்றால் என்ன

ராம்னு ஒருத்தன் இருக்கான். அவனுக்கு இரண்டு நாளுல முட்டையோட விலை எல்லாம் ஏறப்போகுது அப்படிங்கிற ஒரு தகவல் கிடைக்குது. அந்த தகவல் கிடைச்ச உடனே அவனுக்கு ஒரு யோசனை தோணுதுங்க. அது என்னன்னு பாத்தீங்கன்னா, நிறைய முட்டையை வாங்கி வச்சிக்கிட்டு இரண்டு நாள் கழிச்சு அதை விற்று லாபம் பாக்கலாம்னு அவனுக்கு தோணுது.

அதனால, அவன் மூன்று ரூபாய் விலை கொடுத்து, இரண்டாயிரம் முட்டையை மொத்தம் ஆறாயிரம் ரூபாய்க்கு வாங்குறாங்க. இரண்டு நாளைக்கு அப்புறம் ராம் எதிர்பார்த்த மாதிரியே ஒரு முட்டையோட விலை ஒரு ரூபாய் ஏறி நாலு ரூபாய் ஆயிட்டு. ராம் திட்டம் போட்ட மாதிரியே இரண்டாயிரம் முட்டையை நாலு ரூபாய்க்கு வித்து எட்டாயிரம் ரூபாய் எடுக்குறாங்க.

அவன் முதலீடு பண்ண பணம் வந்து ஆறாயிரம் ரூபாய். அவனுக்கு விற்றதன் மூலம் வந்த பணம் எட்டாயிரம் ரூபாய். அவனுக்கு கிடைச்ச லாபம் எவ்வளவுன்னு பார்த்தீங்கன்னா இரண்டாயிரம் ரூபாய். 

இதே கதையில நாம இப்ப முட்டைக்கு பதிலா stocks வச்சு பார்க்கலாம்.

ராம்னு  ஒருத்தன் இருக்கான். கொஞ்ச நாளுல ஒரு stockஓட price, அதாவது ITC stock price ஏறப்போகுது அப்படிங்கிறதை அவன் கண்டுபிடிக்கிறான். 

அவனுக்கு ITC stockஆ வாங்குற idea வருது. அவன் ITCஓட stock price பாக்குறான். நானூறு ரூபாய் இருக்கு. அதுல நூறு quantity வாங்குறான். நாற்பதாயிரம் ரூபாய்க்கு வாங்குறான். 

Swing Trading என்றால் என்ன? புதியவர்களுக்கான எளிய விளக்கம்

சில நாட்களுக்கு அப்புறம் ராம் எதிர்பார்த்த மாதிரியே ITC stockஓட price அம்பது ரூபாய் ஏறி நானூத்தி அம்பது ரூபாய் ஆயிட்டு. ராம் அவன் வச்சிருந்த ITC stockஅ நூறு quantityஅ நானூத்தி அம்பது ரூபாய்க்கு விக்கிறான். அவனுக்கு நாப்பத்தஞ்சாயிரம் கிடைக்குது.

அவன் முதலீடு செய்த பணம் வந்து நாற்பதாயிரம் ரூபாய். அவன் பங்குகளை sell பண்ண பணம் வந்து நாற்பத்தஞ்சாயிரம். அவனுக்கு கிடைச்ச லாபம் பாத்தீங்கன்னா ஐந்தாயிரம் ரூபாய். இந்த மாதிரி ஒரு stockஅ வாங்கி hold பண்ணிட்டு sell பண்றதுக்கு பேருதாங்க swing trading

Indian stock marketல, நாலாயிரத்துக்கு மேல stocks இருக்கு. அந்த stocks எல்லாம் நீங்க முட்டை மாதிரியும், தக்காளி மாதிரியும், நினைச்சுக்கோங்க. இந்த stocks எல்லாம் நீங்க கம்மி விலையில வாங்கிட்டு கொஞ்ச நாள் வச்சிருந்து அதிக விலையில விற்று ஸ்விங் டிரேடிங்ல profit எடுக்கலாம். 

Profit மட்டும்தான் வருமா? அப்படின்னு கேட்டீங்கன்னா, இல்லைங்க, நினைச்ச மாதிரி stock price ஏறாட்டி நஷ்டம் வரவும் வாய்ப்பு இருக்கு. So, stock price ஏறுதா இறங்குதா? அப்படிங்கிறதை நீங்க கண்டுபிடிக்கணும். 

அதை நீங்க கண்டுபிடிக்க technical analysis தெரிஞ்சுக்கணும். நம்ம,Senthil Stock Trader blogல, technical analysis பத்தி, நிறைய content போட்டிருக்கோம். இன்னமும் போடுவோம்.

2 thoughts on “Swing Trading என்றால் என்ன? புதியவர்களுக்கான எளிய விளக்கம்”

  1. Pingback: Intraday trading in Tamil - Senthil Stock Trader

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *